images bio chrono ach nt audio news events fans guest book downloads
 
 
 
 

Prabhu has a heavy responsibility in Daruvu - இந்தியா க்ளிட்ஸ் இணைய தளத்தில் வந்துள்ள செய்தியைப் படிக்க...

 
சிவாஜி பிரபு அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நடிகர் திலகம் 83வது பிறந்த நாள் விழாவில் இயக்குநர் ஏ.சி.திருலோக்சந்தர், ஒளிப்பதிவாளர் ஏ. வின்சென்ட், நடிகை திருமதி சுகுமாரி, இயக்குநர் சித்ராலயா கோபு மற்றும் கதை வசனகர்த்தா பால முருகன் ஆகியோர் கௌரவிக்கப் பட்டு அவர்களுக்கு சிவாஜி நினைவுப் பரிசு வழங்கப் பட்டது. விழாவில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் பச்சமுத்து அவர்கள் உரையாற்றும் போது, நடிகர் திலகத்தின் வாழ்க்கை வரலாற்றினை பாடத்திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும், அவர் பெயரில் சிறந்த தமிழ்ப் படங்கள் மற்றும் கலைஞர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு விருதுகள் வழங்க உள்ளதாகவும் கூறினார். விழாவில் நடிகர் திலகத்தின் திரைப்படங்களிலிருந்து சில காட்சிகள் ஒளிபரப்பப் பட்டன. தொடர்ந்து பேராசிரியர் ஞான சம்பந்தம் மற்றும் ஏவி.எம். சரவணன் ஆகியோர் உரையாற்றினர். மேலும் நடிகர் திலகத்தின் பெயரில் ஏவி.எம். அறக்கட்டளை நடத்தி வரும் மக்கள் நலத் திட்டங்களுக்கு நிதி உதவி வழங்கப் பட்டது.
 
விழாக் காட்சிகள் உங்கள் முன் காணொளியாக. நன்றி YOUTUBE இணைய தளம்.
   
 
டாக்டர் பிரபு கணேசன் அவர்களுக்குள் உள்ள எழுத்தாளரை 1989ம் ஆண்டிலேயே வெளிக்கொணர்ந்த குங்குமம் வார இதழில் வெளியான சாலையோரத்து புளிய மரங்கள் சிறுகதை மறுபதிப்பாக 24.10.2011 தேதியிட்ட குங்குமம் வார இதழில் பிரசுரிக்கப் பட்டுள்ளது. அதன் நிழற்படங்கள் நம் பார்வைக்கு.
முதல் இரண்டு பக்கங்கள்
மூன்றாம் பக்கம்
நான்காம் பக்கம்
ஐந்தாம் பக்கம்
ஆறாம் பக்கம்
ஏழாம் பக்கம்
 
நிழற்படங்களுக்கு நன்றி . திரு பம்மல் ஆர். ஸ்வாமிநாதன், ஆசிரியர், வசந்த மாளிகை
 
nt